/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்டத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம்
/
கரூர் மாவட்டத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம்
ADDED : ஜன 13, 2024 04:16 AM
கரூர்: கரூர் மாவட்ட சுற்றுலா துறை சார்பில், காணியாளம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா நடந்தது.அதில், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளாக தாயம், நொண்டி அடித்தல், கல்லாங்கல், பல்லாங்குழி, உறி அடித்தல், ஆடுபுலி ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
பிறகு பொங்கல் வைக்கப்பட்டு, பொது மக்கள், மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் தங்கவேல் பரிசு வழங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி, உதவி சுற்றுலா அலுவலர் காமில் அன்சர், கடவூர் தாசில்தார் முனிராஜ், பள்ளி தலைமையாசிரியர் சண்முகம், பஞ்., தலைவர் மாரிதங்காள் உள்பட பலர் பங்கேற்றனர்.* கரூர் அரசு கலைக்கல்லுாரியில், இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில், சமத்துவ பொங்கல் விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் அலெக்ஸாண்டர், தேர்வு நெறியாளர் கற்பகம், இளையோர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் லட்சுமண சிங் உள்பட பலர் பங்கேற்றனர். * வாங்கலில் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில், புகையில்லாத போகி விழிப்புணர்வு பேரணி நடந்தது. அதில், தலைமையாசிரியர் பாலகிருஷ்ணன், உடற்கல்வி ஆசிரியர் ராஜா, போலீஸ் எஸ்.ஐ., செந்தில்குமார், தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் திருமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.* தான்தோன்றிமலை பஞ்., யூனியன் கவு ண்டம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில், பொங்கல் விழா நடந்தது. அதில், மாணவ, மாணவிகள் வேட்டி, பாவாடை, தாவணி அணிந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியில், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மணிவண்ணன், வட்டார கல்வி அலுவலர் கவுரி, தலைமை ஆசிரியர் பரணிதரன் உள்பட பலர் பங்கேற்றனர்.