/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வைகாசி விசாகத்தை முன்னிட்டு முருகன் கோவில்களில் பூஜை
/
வைகாசி விசாகத்தை முன்னிட்டு முருகன் கோவில்களில் பூஜை
வைகாசி விசாகத்தை முன்னிட்டு முருகன் கோவில்களில் பூஜை
வைகாசி விசாகத்தை முன்னிட்டு முருகன் கோவில்களில் பூஜை
ADDED : ஜூன் 10, 2025 12:54 AM
கரூர், வைகாசி விசாகத்தை முன்னிட்டு, நேற்று முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் சன்னதி முன்பாக வள்ளி, தெய்வானை உடனாகிய ஆறுமுக பெருமானுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
பால், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெற்றது. பின் சிறப்பு அலங்காரத்தில் முருகன் காட்சி அளித்தார். தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். மாலையில், வெள்ளி மயில் வாகனத்தில் புறப்பாடு நடந்தது.
* கரூர், வெண்ணைமலை பாலசுப்பிரமணியருக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
* கரூர், அண்ணாசாலையில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் உள்ள பாலமுருகனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது..
* புகழிமலை, பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.