/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.13.98 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப் பணிக்கு பூஜை
/
ரூ.13.98 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப் பணிக்கு பூஜை
ரூ.13.98 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப் பணிக்கு பூஜை
ரூ.13.98 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப் பணிக்கு பூஜை
ADDED : பிப் 26, 2026 04:49 AM
கரூர்: கரூர் மாநகராட்சியில், 13.98 கோடி ரூபாய் மதிப்பிலான, 25 புதிய வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், 7 முடிவுற்ற பணிகளை கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி திறந்து வைத்தார்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், புதிய வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை, முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதை, கரூர் எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். கரூர் மாநகராட்சி வார்டு, 24ல் அண்ணா சாலையில், 38.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக பூங்காவுடன் திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணி, திருக்காம்புலியூர் ரவுண்டானாவில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் பயணியர் நிழற்கூடம், எல்.என்.எஸ். கிராமத்தில், 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட ரேஷன் கடை திறப்பு, வார்டு, 25ல் காந்திநகரில், 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் பராமரிக்கும் பணி, வாங்கல், குளத்துபாளையம் நீர் உந்து நிலையத்தில், 38 லட்சம் ரூபாய் மதிப்பில், 30 மின்மோட்டார் மற்றும் மின் உபகரணங்கள் பொருத்தும் பணிகளை எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.

