/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.9.04 கோடி மதிப்பில் திட்ட பணிகளுக்கு பூஜை
/
ரூ.9.04 கோடி மதிப்பில் திட்ட பணிகளுக்கு பூஜை
ADDED : மே 12, 2025 03:27 AM
கரூர்: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் தார்ச்சாலை உள்பட பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது.
கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி, திட்டப்பணிகளுக்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார். கரூர் ராமகிருஷ்ணபுரம், காந்திபுரம், காமரா-ஜபுரம், வையாபுரி நகர், வடிவேல், திருகாம்புலியூர் உள்பட பல்-வேறு வார்டு பகுதிகளில் தார்ச்சாலை, சிறுபாலம், போர்வெல் உடன் சின்டெக்ஸ் தொட்டி உள்பட பல்வேறு பணிகளுக்கான பூமி பூஜை, 9.04 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்டுள்-ளது. அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ, கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி, மேயர் கவிதா, மண்டல தலைவர்கள் கனகராஜ், ராஜா, அன்பரசன் உள்பட பலர் பங்கேற்றனர்.