ADDED : மார் 07, 2026 03:55 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த வைகைநல்லுார் பஞ்., வடக்கு மைலாடி கிராமத்தில், ரூ.40 லட்சம் மதிப்பில் புதிய தார்ச்சாலை பணிக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.
குளித்தலை யூனியன் கமிஷனர் மணிமேகலை தலைமை வகித்தார். முன்னாள் பஞ்., துணைத்தலைவர் பெரியசாமி, இளைஞர் அணி துணை செயலாளர் பெரியசாமி, ஓவர்சியர்கள் ரங்க ரத்தினம், கிருத்திகா. டெபுடி மேனேஜர் கல்பனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். குளித்தலை தி.மு.க., ஒன்றிய செயலாளர் சந்திரன் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தி.மு.க., பொறுப்பாளர்கள் ஒப்பந்ததாரர் துரை மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் கீழதாலியாம்பட்டி கிராமத்தில் ரூ. 25 லட்சம் மதிப்பில் நீர்தேக்க தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குளித்தலை ஒன்றிய செயலாளர் சந்திரன் திறந்து வைத்தார். இதில் ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் பூ ரமேஷ் மற்றும் தாலியாம்பட்டி தி.மு.க., பிரமுகர்கள், யூனியன் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
