/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நடுப்பாளையம் மாரியம்மன் பக்தர்கள் நடத்திய படி பூஜை
/
நடுப்பாளையம் மாரியம்மன் பக்தர்கள் நடத்திய படி பூஜை
நடுப்பாளையம் மாரியம்மன் பக்தர்கள் நடத்திய படி பூஜை
நடுப்பாளையம் மாரியம்மன் பக்தர்கள் நடத்திய படி பூஜை
ADDED : ஏப் 07, 2025 04:25 AM
கரூர்: கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம், புன்னம் பெரிய நடுப்-பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி காப்பு கட்டுதல் மற்றும் கம்பம் நடுதல் தொடங்கியது.
நேற்று முன்தினம் புன்னம் பசுபதிபாளையம் பகுதியில் வீடு, வீடாக சென்று படி பூஜை நடந்தது.
இப்பூஜை 11ம் தேதி வரை குக்கிராமங்களுக்கு நடக்கும். விழா-வையொட்டி, அம்மனை அலங்கரித்து வீடு வீடாக எடுத்து செல்வர். அங்கு பக்தர்களின் வீட்டு வாசல்களில் பூஜை செய்து, சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.இதே போல, 18 கிராமங்களில் உள்ள ஒவ்வொருவர் வீடுக-ளிலும் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.
வரும், 13ல் பொங்கல் வைத்து, வடிசோறு பூஜை நடக்கிறது. 14ல் கோவிலில் இருந்து புறப்பட்டு, கொடுமுடி காவிரி ஆற்றுக்கு சென்று புனித தீர்த்தம் பக்தர்களால் எடுத்து வரப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. தொடர்ந்து 15ல்அபிஷேகம், மாவிளக்கு, கிடா-வெட்டு, சிறப்பு பூஜை நடக்கிறது.

