ADDED : மார் 09, 2024 01:03 AM
அ நிறம் | அளவு
தான்தோன்றிமலை, கரூர் அருகே சுக்காலியூரில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் கழிப்பிடம் கட்டப்பட்டது. பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கழிப்பிடம் சில மாதங்களுக்கு முன் பழுதானது. இதை, கரூர் மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக உள்ளது. இதனால், பொது மக்கள் திறந்தவெளிப்பகுதியை கழிப்பிடமாக பயன்படுத்த துவங்கியுள்ளனர். அப்பகுதியில் சுகாதார கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சுக்காலியூர் பகுதியில் உள்ள கழிப்பிடத்தை, சீரமைத்து பொதுமக்கள் பயன் பாட்டுக்கு விட, கரூர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
