/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு பள்ளியில் அஞ்சலக விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
அரசு பள்ளியில் அஞ்சலக விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : அக் 15, 2024 07:20 AM
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், இல்லம் தேடி அஞ்சலகம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் சாகுல் அமீது வரவேற்றார். அரவக்குறிச்சி துணை அஞ்சல் அதிகாரி பரமேஸ்வரி வாழ்த்தி பேசினார். அஞ்சல் துறை கண்காணிப்பாளர் சண்முகம்,' தேசிய அஞ்சல் வாரத்தை முன்னிட்டு, அஞ்சலகத்தினுடைய சேவைகள், மக்களின் இல்லத்திற்கே வந்து வழங்கப்படுகிறது' என்றார். இந்தியாவிலேயே, செல்வமகள் திட்டத்தில் தமிழ்நாடு மட்டும் எட்டு ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது என்றும், பல்வேறு இன்சூரன்ஸ் திட்டங்கள் குறித்தும் பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் கூறப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியில், அவர்களுக்கு வங்கிக் கணக்கு அட்டை வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு பாஸ் புத்தகங்கள் கிடையாது, இந்நிலையில், அவர்களுடைய வரவு செலவுகளை அறிந்து கொள்வதற்காக 77990 22509 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் விடுவதன் மூலமாக, தங்களுடைய பேலன்ஸ்களை அறிந்து கொள்ள முடியும். மேலும் வரவு செலவுகளை இ-மெயில் வாயிலாகவும் அறிந்து கொள்ள முடியும் என விளக்கம் அளிக்கப்பட்டது.நிகழ்ச்சிகளை ஆசிரியர் சகாய வில்சன் தொகுத்து வழங்கினார். பட்டதாரி ஆசிரியர் ஷகிலா பானு நன்றி கூறினர்.