தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ தொகுதிகளுக்கு தபால் ஓட்டு படிவம் வருகை

தொகுதிகளுக்கு தபால் ஓட்டு படிவம் வருகை

தொகுதிகளுக்கு தபால் ஓட்டு படிவம் வருகை


ADDED : மார் 28, 2026 04:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2026 04:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கரூர: கரூர் மாவட்டத்தில் உள்ள, 4 சட்டசபை தொகுதி-களில், 645 ஓட்டுச்சாவடி அமைவிடங்களில் 1,111, ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆண் வாக்காளர்கள், 4,06,027, பெண் வாக்கா-ளர்கள், 4,39,054 மற்றும் மூன்றாம் பாலினத்த-வர்கள், 83 என மொத்தம், 8,45,164 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்நிலையில், தேர்தல் ஓட்டுச்சாவடிக்கு நேரில் சென்று ஓட்டளிக்க முடியாத, 4 சட்டசபை தொகு-திகளில் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களது ஓட்டுகளை எளிதாக செலுத்தும் வகையில், ஏற்-பாடு செய்யப்பட்டுள்ளன. அவர்களின் விருப்-பத்தை பெற ஏதுவாக, 12 வகையான துறைக-ளுக்கு ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமனம் செய்து, தபால் ஓட்டுகள் வழியில் ஓட்டளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஒருங்கிணைப்பு அலுவலர்கள், ஓட்டுப்பதிவு நாளில் பணியில் ஈடுபடும் தங்கள் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு படிவம் 12டி வழங்கி, அவர்களது விருப்பத்தினை பெற்று ஒப்புதல் செய்து ஒருங்கிணைப்பு அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த தபால் ஓட்டு அளிக்க தேவையான ஓட்டு சீட்டு உள்பட படிவங்கள், சென்னையில் அச்சடிக்கப்பட்டு வந்துள்ளது. இது, கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வள மைய கட்டடத்தில் வைக்கப்பட்-டுள்ளது.

நேற்று சரக்கு வாகனம் மூலம் வந்த ஓட்டு சீட்டு உள்பட படிவங்களின் பண்டல்களை இறக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இவை அனைத்தும் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு, சீல் வைக்கப்படும். தபால் ஓட்டுப்பதிவு நாளில், அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் அலுவலகங்க-ளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us