/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
லாலாப்பேட்டையில் பானை விற்பனை தீவிரம்
/
லாலாப்பேட்டையில் பானை விற்பனை தீவிரம்
ADDED : ஜன 15, 2025 12:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்,:
கிருஷ்ணராயபுரம் அடுத்த, லாலாப்பேட்டை கொடிக்கால் தெரு பகுதியில் மண்பாண்ட தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள், பொங்கலை பண்டிகையை முன்னிட்டு, சூரிய பொங்கல் வைப்பதற்காக மண் பானைகளை விற்பனை செய்தனர்.
ஒரு பானை, 150 முதல் விற்பனை செய்யப்பட்டது. மேலும் ஒரு மண் சட்டி, 50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானை, மண் சட்டி, அகல் விளக்கு விற்பனை மும்முரமாக நடந்தது.