/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மேட்டுமருதுார் கல்லுப்பாலத்தில் பள்ளம் போக்குவரத்து கடும் பாதிப்பு
/
மேட்டுமருதுார் கல்லுப்பாலத்தில் பள்ளம் போக்குவரத்து கடும் பாதிப்பு
மேட்டுமருதுார் கல்லுப்பாலத்தில் பள்ளம் போக்குவரத்து கடும் பாதிப்பு
மேட்டுமருதுார் கல்லுப்பாலத்தில் பள்ளம் போக்குவரத்து கடும் பாதிப்பு
ADDED : டிச 14, 2024 12:58 AM
குளித்தலை, டிச. 14-
மேட்டுமருதுாரில், பழமையான கல்லு பாலத்தில் பள்ளம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குளித்தலை அடுத்த, மாயனுார் காவிரி ஆற்று கதவணையில் இருந்து, புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், பழைய கட்டளை மேட்டு வாய்க்கால் செல்கிறது.
பழைய கட்டளை மேட்டு வாய்க்காலில் வீரவள்ளி கிராமத்தில் இருந்து, கொடிங்கால் வடிகால் வாய்க்காலாக உருவாகி வதியம், குளித்தலை, வாலாந்துார், பரளி, மேட்டுமருதுார், குமாரமங்கலம் வழியாக திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை தேவஸ்தானம் தோகை கரையில் தென்கரை பாசன வாய்க்காலுடன் இணைந்து, காவிரி ஆற்றிலும், உய்யக்கொண்டான் வடிகால் வாய்க்காலிலும் இணைகிறது.
இந்தக் கொடிங்கால் வடிகால் வாய்க்கால், 90 ஆண்டுகளுக்கு மேலாக சுற்றுப்பகுதி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
கொடிங்கால் வடிகால் வாய்க்கால் துவக்கத்தில் இருந்து முடியும் வரை உள்ள, அனைத்து போக்குவரத்து சாலைகளிலும் வதியம், குளித்தலை, வாலாந்துார், பரளி, குமாரமங்கலம் ஆகிய நெடுஞ்சாலையில் புதியதாக பாலம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
மருதுார் டவுன் பஞ்., மேட்டு மருதுாரில் அப்போது கட்டப்பட்ட கருங்கல்லால் ஆன, 40 மீட்டர் தொலைவில் 18 மதகுகள் கொண்ட கருங்கல்லால் பாலம் அமைக்கப்பட்டு, போக்குவரத்து பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்த கல்லுப்பாலம் தொடர்ந்து பெய்த கனமழையால் பாலத்தில் பள்ளமும், சுற்றுச்சுவரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, டவுன் பஞ்., தலைவர் சகுந்தலா பாலத்தை பார்வையிட்டு, விபத்தை தடுக்கும் வகையில் மணல் மூட்டைகள் அமைக்கப்பட்டு, போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
கல்லுப்பாலம் சேதம் ஏற்பட்டுள்ளதால், இப்பகுதி வழியாக, 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கல்லுபாலத்தை அகற்றிவிட்டு, இருவழி சாலை கொண்ட புதிய பாலம் அமைக்க வேண்டும் என, தமிழக முதல்வருக்கு விவசாயிகள், கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

