ADDED : ஜூலை 27, 2025 01:33 AM
அ நிறம் | அளவு
கரூர் :கரூர் அருகே சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.கரூர் - கோவை எம்.ஜி.எம்., பெரிய ஆண்டாங்கோவில் சாலையில் கோவில்கள் மற்றும் வீடுகள் உள்ளன. அந்த வழியாக, 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பொதுமக்கள், வாகனங்களில் சென்று வருகின்றனர். அமராவதி ஆற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைக்கும், சுற்றுலா பயணிகள் செல்கின்றனர்.
இந்நிலையில், எம்.ஜி.எம்., பெரிய ஆண்டாங்கோவில் சாலையில், பல இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். குறிப்பாக, இரவு நேரத்தில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர், தடுமாறி விழுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
