/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நெடுஞ்சாலையோரத்தில் கோழி இறைச்சி கழிவுகள்
/
நெடுஞ்சாலையோரத்தில் கோழி இறைச்சி கழிவுகள்
ADDED : பிப் 26, 2024 07:04 AM
கரூர், : வேலாயுதம்பாளையம், தேசிய நெடுஞ்சாலையோரத்தில் கோழி இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரூர் அருகே வேலாயுதம்பாளையம் மற்றும் சுற்றுப்பகுதியில் ஏராளமான கோழி, வாத்து இறைச்சி கடைகள் உள்ளன. இங்கு அனைத்து நாட்களிலும் இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது. இங்கு சேகரமாகும் கோழி இறகு, குடல் கழிவுகளை கடைக்காரர்கள், தேசிய நெடுஞ்சாலையோரத்தில் கொட்டி வருகின்றனர். இறைச்சி கழிவுகள் அழுகுவதால், இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. அத்துடன் அழுகிய இறைச்சி கழிவுகளை பறவை, நாய்கள் துாக்கி சென்று சுற்றுப்பகுதியில் போட்டு விட்டு செல்கின்றன.
இதனால் குழந்தைகள், குடியிருப்போர், வாகன ஓட்டிகள் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர். காற்று வீசும்போது, கோழி இறகுகள் பறந்து செல்கின்றன. எனவே இப்பகுதியில் இறைச்சி கழிவுகளை கொட்டாத வகையில் தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

