ADDED : செப் 30, 2026 05:55 AM
அ நிறம் | அளவு
கரூர்; தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு.,) கரூர் கிளை சார்பில், திட்ட தலைவர் சுப்பிரமணியம் தலைமையில், மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், ஒப்பந்த முறையில் கணக்கீடு செய்ய வலியுறுத்தும் உத்தரவை திரும்ப பெற வேண்டும்.
நிரந்த தன்மை வாய்ந்த பணிகளில் ஒப்பந்த முறையை திணிக்க கூடாது. மின் விநி-யோகத்தை தனியார்மயமாக்கும் ஸ்மார்ட் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்-கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், மாநில செயலாளர் தனபால், கிளை செயலாளர் நெடுமாறன் உள்பட, பலர் பங்கேற்றனர்.
