ADDED : நவ 24, 2026 04:44 AM
அ நிறம் | அளவு
கரூர்: தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, கரூர் கிளை சார்பில் திட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமையில், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட முத்தரப்பு ஒப்பந்தம் அடிப்படையில் கேங்மேன்கள் அனைவரையும், கள உதவியாளராக பதவி மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், கிளை தலைவர் சரவணக்குமார், செயலாளர்கள் சிராஜூதின், நெடுமாறன், பொருளாளர் ஈஸ்வரன் உள்பட, பலர் பங்கேற்றனர்.
