/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாநகராட்சியில் டைடல் பார்க் அமைக்கப்படும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
/
கரூர் மாநகராட்சியில் டைடல் பார்க் அமைக்கப்படும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
கரூர் மாநகராட்சியில் டைடல் பார்க் அமைக்கப்படும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
கரூர் மாநகராட்சியில் டைடல் பார்க் அமைக்கப்படும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
ADDED : நவ 25, 2024 02:41 AM
கரூர்: ''கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில், டைடல் பார்க் அமைக்கப்படும்,'' என, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
கரூர் கிளை சி.ஐ.ஐ., சார்பில், தொழில் முனைவோர் கலந்து-ரையாடல் கூட்டம், தனியார் கலையரங்கில், நேற்று நடந்தது. அதில், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது:
கரூர் மாவட்டத்தில் உள்ள தொழில் முனைவோர்களின் கோரிக்-கைகள் கடந்த, ஒரு வாரத்திற்கு முன் கேட்கப்பட்டு, அதை நிறை-வேற்றும் வகையில், முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கரூர் மாவட்டத்தில், 200 ஏக்கர் நிலத்தில் சிப்காட் அமைக்க, பொங்கல் பண்டிகைக்கு முன் இடம் தேர்வு செய்யப்படும். அதில், தொழிலாளர்களுக்கு குடியிருப்பு வசதிகளை செய்ய, முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். அர-வக்குறிச்சி தொகுதியில், முருங்கை பூங்கா அமைக்க, ஒரு வாரத்தில் இடம் தேர்வு செய்யப்படும். கரூரில் டிரேட் பார்க், ஐந்து ஏக்கர் நிலத்தில் அமைய உள்ளது. மினி டெக்ஸ் பார்க் கைத்தறி துறை சார்பில், கரூர் மாவட்டத்தில் அமைய உள்ளது.
கரூரில் விமான நிலையம் அமைக்கவும் நடவடிக்கை மேற்-கொள்ளப்படும். வனத்துறையிடம் இருந்து, பொதுப்பணி துறைக்கு மாற்றிய பிறகு, தாதம்பாளையம் ஏரி துார்வாரப்படும். அமராவதி ஆற்றுப்பகுதியில், மூன்று தடுப்பணைகள் கட்ட நடவ-டிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரூர் புறநகர் பஸ் ஸ்டாண்டில், 40 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. நீதிமன்-றத்தில் வழக்கு உள்ளதால், அதை சட்டரீதியாக தீர்வு காணப்-பட்டு, புறநகர் பஸ் ஸ்டாண்ட் நிச்சயம் செயல்படும். அதேபோல், கரூர் திருவள்ளுவர் மைதானத்திலும், ஒரு கோடியே, 70 லட்ச ரூபாய் செலவில் நுாலகம் அமையும். கரூர் மாநகராட்சி பகுதியில், 'டைடல் பார்க்' அமைக்கப்படும்.
காமராஜ் தினசரி மார்க்கெட், வெங்கமேடு மீன் மார்க்கெட் விரைவில், பொது மக்கள் பயன்பாட்டுக்கு வரும். கரூர் அரசு விளையாட்டு மைதானத்தில், நீச்சல் குளம் அமைய நடவடிக்கை எடுக்கப்படும். தி.மு.க., அரசு பொறுப்பேற்ற கடந்த, மூன்று ஆண்டுகளில், கரூர் மாவட்டத்துக்கு, 3,000 கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும், வரும், 2030ம் ஆண்டுக்குள், கரூரில், 50,000 கோடி ரூபாய் வரு-மானம் இலக்கை நிறைவேற்ற, அரசு மூலம் பெற வேண்டிய திட்-டங்களை உறுதியாக பெற்று தருவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
கலெக்டர் தங்கவேல், கரூர் கிளை சி.ஐ.ஐ., தலைவர் பாலசுப்-பிரமணி தொழில் அதிபர்கள் நாச்சிமுத்து, ராஜா சண்முகம், கோபால கிருஷ்ணன், சுசீந்திரன், வெங்கடேஷன், பிரபு உள்-ளிட்ட, 73 தொழில் முனைவோர் சங்கங்களை சேர்ந்த நிர்வா-கிகள் பங்கேற்றனர்.