கராத்தே பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாராட்டு
கராத்தே பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாராட்டு
ADDED : ஜூன் 22, 2026 04:24 AM
அ நிறம் | அளவு
கரூர்:கரூர்,
'யுகி ஷிட்டோ ரியூ' கராத்தே அகடாமி சார்பில், மாணவ, மாணவியர்களுக்கு
பாராட்டு விழா, வேலாயுதம்பாளையம் புகழி திருமண மண்டபத்தில்
நடந்தது.
அதில், கராத்தே தேர்வில் தேர்ச்சி பெற்ற, 100க்கும் மேற்பட்ட
மாணவ, மாணவியர்களுக்கு கருப்பு பட்டை, முதுநிலை கருப்பு பட்டை மற்றும்
வண்ணப்பட்டைகள் வழங்கப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.விழாவில்,
தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்க டெக்னிக்கல் இயக்குனர்
ராஜசேகரன், கரூர் மாவட்ட கராத்தே சங்க செயலாளர் செந்தில்குமார், துணை
பயிற்சியாளர்கள் ரமேஷ், இளஞ்செழியன் உள்பட பலர் பங்கேற்றனர்.
