/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வாய்க்காலில் கழிவுகள் தண்ணீர் செல்ல தடை
/
வாய்க்காலில் கழிவுகள் தண்ணீர் செல்ல தடை
ADDED : டிச 06, 2024 07:27 AM
கரூர்: புகழூர் வாய்க்காலில், கழிவுகள் கொட்டப்படுவதால் தண்ணீர் செல்ல தடையாக உள்ளது.
கரூர் ஊராட்சி ஒன்றியம், வேலாயுதம்பாளையம் அருகே புகழூர் வாய்க்கால் உள்ளது. வாய்க்கால் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல், கரும்பு, வாழை, வெற்றிலை, பாய் கோரை, தென்னை போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. அருகேயுள்ள பாலத்துறையில் காய்கறி கடைகள், டீ கடைகள், வாத்து கறி கடைகள், ஓட்டல்கள் உள்ளன.
கடைகளிலிருந்து முட்டை ஓடு, பிளாஸ்டிக் பை, கப்புகள், அழுகிய காய்கறிகள் போன்றவற்றை புகழூர் வாய்க்கால் மற்றும் அதையொட்டியுள்ள இடத்தில் கொட்டுகின்றனர். இந்த கழிவுகளும் சில நாட்களில் வாய்க்காலில் விழுந்து விடுகிறது. இதனால், நீரோட்டம் பாதிக்கப்படுகிறது. மேலும், நீர் மாசுபடுவதால் விளைச்சல் பாதிக்கப்படுகிறது. எனவே, வாய்க்காலில் கொட்டப்படும் கழிவுகளை அகற்ற வேண்டும்.