/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கொத்தமல்லி தழை வரத்து குறைவால் விலை உயர்வு
/
கொத்தமல்லி தழை வரத்து குறைவால் விலை உயர்வு
ADDED : நவ 25, 2024 02:36 AM
கரூர்: கோடை காலமான ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில், மழை இல்-லாததால் கொத்தமல்லி தழை, ஒரு கிலோ, 80 முதல், 100 ரூபாய் வரை விற்றது. இதனால், காய்கறி கடைகள், உழவர்-சந்தை, மார்க்கெட்டுகளில், கொத்தமல்லி தழை இலவசமாக வழங்குவது நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து, வியாபாரிகள் கூறியதாவது:
கரூர் மாவட்டத்தில், காவிரி, அமராவதி ஆற்றுப்பகுதிகளில், கொத்தமல்லி ஊடுபயிராக சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மழை காரணமாக நல்ல விளைச்சல் அடைந்த கொத்தமல்லி, தொடர் மழை காரணமாக அறுவடை செய்ய முடியவில்லை. மேலும், தேனி மாவட்டம் சின்னமனுார், கம்பம், திண்டுக்கல் மாவட்டம், பழனி, ஒட்டன் சத்திரம் பகுதிகளில் இருந்தும் கொத்தமல்லி தழை வரவில்லை. வரத்து குறைவால் கடந்த மாதம் ஒரு கிலோ, 50 ரூபாய் வரை விற்றது. தற்போது, 70 ரூபாய் வரை கொத்த-மல்லி விலை அதிகரித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைய துவங்கியுள்ளதால், வரும் தை மாதம் வரை கொத்த-மல்லி தழை விலை குறைய வாய்ப்பில்லை.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.