/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கோவில் செயல் அலுவலரை கண்டித்து அர்ச்சகர்கள் காத்திருப்பு போராட்டம்
/
கோவில் செயல் அலுவலரை கண்டித்து அர்ச்சகர்கள் காத்திருப்பு போராட்டம்
கோவில் செயல் அலுவலரை கண்டித்து அர்ச்சகர்கள் காத்திருப்பு போராட்டம்
கோவில் செயல் அலுவலரை கண்டித்து அர்ச்சகர்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : ஜன 30, 2026 04:59 AM

குளித்தலை: அய்யர்மலை, ரத்தினகிரீஸ்வரர் கோவில் செயல் அலுவலரை கண்டித்து, அர்ச்சகர்கள், குடிப்பாட்டுக்காரர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த அய்யர்மலையில், சுரும்-பார்குழலி உடனுறை ரத்தினகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மலை உச்சியில் அமைந்துள்ள இக்கோவிலில், 32 அர்ச்சகர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு மாத ஊதியம் இல்லை. அர்ச்-சனை சீட்டில் பங்கு தொகை மட்டும் ஊதியமாக வழங்கப்படுகி-றது.இந்நிலையில், கடந்த சில மாதங்களாக அவர்களுக்கு உரிய பங்கு தொகை முறையாக வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் கோவில் குடிப்பாட்டுக்காரர்களும், கோவில் திருவி-ழாவை நடத்துவதில், செயல் அலுவலர் பல குளறுபடிகளை செய்து வருவதாக கூறி வருகின்றனர்.
இதனால் அர்ச்சகர்கள், கோவில் குடிப்பாட்டுக்காரர்கள் நேற்று காலை, 10:30 மணியளவில் செயல் அலுவலர் தங்கராஜிடம் இது-குறித்து கேட்டனர். அப்போது அவர், சரியாக பதில் கூறாமல் அவர்களை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார். இதனால் ஆவேசமடைந்த அவர்கள், கோவில் அலுவலகம் அருகேயுள்ள மரத்தடியில் அமர்ந்து, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களுக்கு உரிய பங்கு தொகையை தர வேண்டும் என அர்ச்சகர்-களும், கோவில் நிகழ்ச்சிகளில் உரிய மரியாதை அளிக்க வேண்டும்; இல்லாவிட்டால் தைப்பூச திருவிழாவை புறக்கணிப்-பதாக குடிப்பாட்டுக்காரர்களும் கூறினர். மேலும், திருவிழா நிகழ்ச்சிகளை முடக்கும் வகையில் செயல்படும் செயல் அலுவ-லரை மாற்ற வேண்டும் என்றனர்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் செயல் அலு-வலர் தங்கராஜி அமைதி பேச்சு
வார்த்தை நடத்தி, 10 நாட்களுக்குள் அர்ச்சகர்களுக்கு உரிய பங்கு தொகையை தருவதாகவும், கோவில் குடிப்பாட்டுகாரர்களுக்கும், சீர்பாத துாக்கிகளுக்கும் உரிய மரியாதை அளிப்பதாக கூறியதைய-டுத்து, போரட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

