/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் வரும் 27ல் தனியார் வேலை வாய்பு முகாம்
/
கரூரில் வரும் 27ல் தனியார் வேலை வாய்பு முகாம்
ADDED : ஜூலை 11, 2025 01:12 AM
கரூர், கரூரில் வரும், 27ல் தனியார் துறையின் சார்பில், வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
கரூர், தான்தோன்றிமலை அரசு கலை கல்லுாரியில் வரும், 27ல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில் உற்பத்தி துறை, ஜவுளித்துறை, இன்ஜினியரிங், கட்டுமானம், ஐ.டி., துறை, ஆட்டோ மொபைல்ஸ், விற்பனைத் துறை, மருத்துவம் சார்ந்த துறைகள் உள்ளிட்ட, 200-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள், 10 ஆயிரத்து-க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். முகாமில் 8ம் வகுப்பு முதல், முதுகலை பட்டப்படிப்பு, தொழிற் கல்வி பயின்றவர்கள், செவிலியர்கள், பொறியியல் மாணவர்கள் என அனைத்து பிரிவினரும் கலந்து கொள்ளலாம்.
வருகை புரியும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், தங்களது சுய விபரம் மற்றும் கல்வி சான்றுகளின் நகல்களுடன் கலந்து கொள்ள வேண்டும். முகாமில் தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு, பணி நியமன ஆணை உடனுக்குடன் வழங்கப்படும். முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து
செய்யப்படமாட்டாது. வேலை தேடும் மனுதாரர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் விபரங்களை பதிவு செய்தல் வேண்டும். விபரங்களுக்கு, 04324-223555, 9345261136 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.