தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம்

நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம்

நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம்


ADDED : ஆக 28, 2025 01:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2025 01:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர், கரூரில் தனியார் நிறுவனங்களின் சார்பில், நாளை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.

கரூர் வெண்ணைமலையில் உள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (29ம் தேதி) காலை 10:00 முதல் பகல் 2:00 மணி தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில், 25க்கும் மேற்பட்ட தனியார் துறை வேலையளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்று, 200க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பவுள்ளனர். முகாமில், 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ., மற்றும் பொறியியல் பட்டதாரிகள் என அனைவரும் கலந்து கொள்ளலாம்.

கரூர் மாவட்டத்தை சேர்ந்த, வேலை தேடும் இளைஞர்கள் தங்களுடைய சுயவிபர குறிப்பு, உரிய கல்விச்சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றுடன் பங்கேற்கலாம். முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலையளிப்போர் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். விபரங்களுக்கு, 04324-223555, 93452 61136 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us