ADDED : ஜூன் 18, 2026 05:20 AM
கரூர்:மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலகத்தில், நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம்
நடக்கிறது என, கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:கரூர்,
வெண்ணைமலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், நாளை (19ம்
தேதி) காலை, 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை தனியார் நிறுவனங்கள்
சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில், 25க்கும் மேற்பட்ட
தனியார் துறை வேலையளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்று, 200க்கும்
மேற்பட்ட பணியிடங்களை நிரப்பவுள்ளனர். முகாமில், 8ம் வகுப்பு முதல்
பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ., மற்றும் பொறியியல் பட்டதாரிகள்
என அனைவரும் கலந்து கொள்ளலாம்.
மாவட்டத்தை சேர்ந்த வேலை தேடும்
இளைஞர்கள் தங்களுடைய சுயவிபர குறிப்பு, உரிய கல்விச்சான்று, ஆதார்
அட்டை ஆகியவற்றுடன் பங்கேற்கலாம். முகாமில் கலந்து கொள்ள
விருப்பமுள்ள வேலையளிப்போர் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள்,
ww.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
விபரங்களுக்கு, 04324--223555, 94990 55912 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
