/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
/
கரூரில் நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
ADDED : ஜூலை 25, 2024 01:34 AM
கரூர்: கரூரில், தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை நடக்கி-றது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் வெண்ணைமலையில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டும் மையத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (26ம் தேதி) காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை நடக்கி-றது.
முகாமில் பிரபல தனியார் நிறுவனங்களின் வேலைய-ளிப்போர் கலந்து கொண்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ள, 4,000-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். முகாம் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பிரபல தனியார் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தாலும் வேலைநாடுனர்-களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்பட-மாட்டாது. தங்களது சுயவிவரங்களை www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு மொபைல் 9789123085, 9360557145 தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.

