/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கட்டுமான தொழிலாளர்களுக்கு தனித்துறை தொழிற்சங்க பாதுகாப்பு கூட்டமைப்பு மனு

ADDED : மார் 19, 2025 01:15 AM
கட்டுமான தொழிலாளர்களுக்கு தனித்துறை தொழிற்சங்க பாதுகாப்பு கூட்டமைப்பு மனு
கரூர்:கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தனித்துறை உருவாக்க வேண்டும் என, தொழிற்சங்க பாதுகாப்பு கூட்டமைப்பு, கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தொழிற்சங்க பாதுகாப்பு கூட்டமைப்பு (கட்டுமானம் மற்றும் அமைப்புச்சாரா தொழிலாளர்கள்) சார்பில். அமைப்பு சாரா கட்டுமானத் தொழிலாளர்களில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கன்னியாகுமரி முதல் சென்னை கோட்டை வரை உரிமை மீட்பு பயணத்தை மாநில தலைவர் கதிர்வேல் தலைமையில் மேற்கொண்டுள்ளனர். மார்ச் 3-ல் கன்னியாகுமரியில் பிரசார பயணத்தை தொடங்கிய குழுவினர், கரூர் மாவட்டத்துக்கு நேற்று
வந்தனர். நகரின் பிரதான இடங்களில் பிரசாரம் மேற்கொண்டனர். பின், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அதில், கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர்களுக்கென்று தனித்துறையை உருவாக்கி, கட்டுமான தொழிலாளர்களை சட்டப்படி பாதுகாக்க வேண்டும். நல வாரியத்தில் வழங்கப்படும் ஓய்வூதியம், 3 ஆயிரமாக உயர்த்தி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தினர்.
பல்வேறு மாவட்டங்களில் பயணம் மேற்கொள்ளும் இக்குழுவினர், மார்ச் 28 ல் சென்னை தலைமைச் செயலகத்தில் தொழிலாளர் நலத்துறை செயலாளரிடம் தங்களது கோரிக்கை மனுவை வழங்க உள்ளனர்.