/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் அருகே தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த கோவில் நிலம் மீட்கப்பட்டது

ADDED : அக் 25, 2025 01:40 AM
கரூர், கரூர் அருகே, தனியார் ஆக்கிரமிப்பில் இரு ந்த, கோவில் நிலம் நேற்று மீட்கப்பட்டது.
கரூர் மாவட்டம், காதப்பாறை பஞ்சாயத்து, வெண்ணைமலையில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காதப்பாறை பஞ்., சேரன் நகர் அருகில், தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த, வெண்ணைமலை பால சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான, 4.11 ஏக்கர் நிலத்தை, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுபடி, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணிகாந்தன் தலைமையிலான, அதிகாரிகள் மீட் டனர். பிறகு, அந்த இடத்தில் கோவிலுக்கு சொந்தமான காலி நிலம் என, போர்டு வைக்கப்பட்டது. கரூர் டவுன் டி.எஸ்.பி., செல்வராஜ் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.