/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் பரிசு வழங்கல்
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் பரிசு வழங்கல்
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் பரிசு வழங்கல்
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் பரிசு வழங்கல்
ADDED : செப் 12, 2025 01:20 AM
கரூர், முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற, 1,200 பேருக்கு பரிசு வழங்கப்பட்டது.
கரூர் மாவட்ட மைதானத்தில், முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. கலெக்டர் தங்கவேல் பரிசுகளை வழங்கி கூறியதாவது:
கரூர் மாவட்டத்தில் மாவட்ட அளவில், 5 பிரிவுகளில் மொத்தமாக, 53 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. பள்ளிகள் பிரிவில், 5,263 மாணவ,மாணவியரும், கல்லுாரி பிரிவில், 3,353 மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 124, அரசு பணியாளர்கள் பிரிவில், 423, பொதுப்பிரிவில், 667 ஆண்கள், பெண்கள் என மொத்தம், 9,830 பேர் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற, 1,200 பேருக்கு, 53.40 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசு தொகை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.
மாவட்ட விளையாட்டு அலுவலர் குணசேகரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) செல்வமணி உள்பட பலர் பங்கேற்றனர்.