ADDED : பிப் 06, 2026 04:40 AM

குளித்தலை: கரூர்
மாவட்டம் முழுவதும் அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்கு-டியினர் நலத்துறை
சார்பில், மனிதநேய வாரவிழா நிழச்சி, பள்-ளிகள் தோறும் நடந்து வந்தது.
இதில், கட்டுரை, கவிதை, திருக்-குறள், ஓவியம், பேச்சு, நடனம், நாடகம் உள்பட
பல்வேறு பேட்-டிகள் நடத்தப்பட்டன. அதில் வெற்றி பெற்ற மாணவ, மாண-வியர்,
மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டனர். பின், அரசு ஆதிதிராவிடர்
மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்-பாக மனிதநேய வாரவிழா நிறைவு நிகழ்ச்சி
கரூரில் நடந்தது.இந்நிகழ்ச்சியில், குளித்தலை அடுத்த நெய்தலுார் அரசு
ஆதிதிரா-விடர் நல தொடக்கப்பள்ளி மற்றும் அரசு ஆதிதிராவிடர் நல
உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவ,
மாணவியருக்கு பரிசு, சான்றிதழ் வழங்-கப்பட்டது.
அரசு ஆதிதிராவிடர் நல
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மலர்கொடி, அரசு ஆதிதிராவிடர் நல
உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவா, ஆசிரியர்கள் சுதாகர், கலைச்செல்வி,
மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் கண்ணதாசன், உழவர் ஆய்வு மன்ற
அமைப்பாளர் ஆனந்தராஜ் உள்பட கிராம மக்கள் மற்றும் பெற்றோர் அனைவரும் வெற்றி
பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி
பாராட்டினர்.
