/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
/
வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
ADDED : ஜன 26, 2025 04:44 AM
கரூர்: கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் பங்கேற்ற கலெக்டர் தங்கவேல் கூறியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ஐ தகுதியான நாளாக கொண்டு, புதிய வாக்காளர்களை பெருமளவில் சேர்த்தல், அதிலும் குறிப்-பாக 18 வயது பூர்த்தியடைந்த இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. .https://voterportal.eci.gov.in மற்றும் VOTER HELP LINE என்ற மொபைல் செயலி மூலமாகவும், வாக்காளர்கள் பெயர், புகைப்-படம் மற்றும் இதர பதிவுகள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். அனைத்து சந்தேகங்களுக்கும் தீர்வ-ளிக்கும் வகையில், 1950 என்ற எண்ணில் வாக்காளர் உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, கரூர் ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் இருந்து, தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணியை, ஆர்.டி.ஓ., முகமதுபைசல் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., கண்ணன், கலெக்டர் நேர்முக உதவி-யாளர் (பொது) பச்சமுத்து, மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

