/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காமராஜர் பிறந்த நாள் விழா வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
/
காமராஜர் பிறந்த நாள் விழா வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
காமராஜர் பிறந்த நாள் விழா வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
காமராஜர் பிறந்த நாள் விழா வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
ADDED : ஜூலை 22, 2025 01:14 AM
கரூர், லயன்ஸ் கிளப் ஆப் கரூர் மெஜஸ்டிக் சார்பில், முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பேச்சு போட்டி நடந்தது.
அதில், 10,11,12 வயதுடைய பள்ளி மாணவ, மாணவியருக்கு, காமராஜரின் கல்வி மற்றும் சமுதாய பணி என்ற தலைப்பில் பேச்சு போட்டி நடத்தப்பட்டது. கரூர் மாநகராட்சி அளவிலான, 10 பள்ளிகளை சேர்ந்த, 36 மாணவ, மாணவியர் போட்டியில் பங்கேற்றனர்.
இறுதி போட்டியில் பரணி பார்க் பள்ளி மாணவியர் சிருஷ்டிகா முதலிடம், மதுலிகா இரண்டாமிடம், சாஸ்மிதா, சுதர்ஷினி ஆகியோர் மூன்றாமிடம் பிடித்தனர். பங்கேற்ற அனைவருக்கும், 1,500 ரூபாய் மதிப்புள்ள பரிசு வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் சிந்தன், சிவக்குமார், மெய்யப்பன், நடுவர்கள் கவிஞர் செல்வம், சுந்தர கணேசன், அகல்யா, பி.ஆர்.ஓ., மேலை பழனியப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.