ADDED : ஏப் 13, 2025 04:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், நிறுத்தப்-பட்டிருந்த கார் திருட்டு போனது.
கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் பகுதியை சேர்ந்தவர் டாக்டர் தட்சிணாமூர்த்தி, 41; கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவம-னையில், துணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த, 5ல் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், வேகன் காரை நிறுத்தி விட்டு சென்றார். பிறகு நேற்று முன்தினம், தட்சிணாமூர்த்தி காரை எடுக்க சென்ற போது காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து, தட்சிணாமூர்த்தி அளித்த புகார்படி, பசுபதிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.