எம்.குமாரசாமி இன்ஜி., கல்லுாரியில் ப்ராஜக்ட் எக்ஸ்போ கண்காட்சி
எம்.குமாரசாமி இன்ஜி., கல்லுாரியில் ப்ராஜக்ட் எக்ஸ்போ கண்காட்சி
ADDED : மார் 09, 2026 06:40 AM
அ நிறம் | அளவு
கரூர்; தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில், 'ப்ராஜக்ட் எக்ஸ்போ-2026' எனும் கண்காட்சி நடந்தது. கல்லுாரி தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
மாணவர்களின் புதுமை திறன், தொழில்நுட்ப அறிவு மற்றும் செயல்முறை சிந்தனையை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் கண்காட்சியில் இடம்பெற்றன. நிகழ்ச்சிக்கு, கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜு, டாடா எல்க்ஸி நிறுவனத்தின் மூத்த விற்பனை மேலாளர் சிவஞான சங்கர் ஆகியோர் கலந்து-கொண்டனர்.விழாவில், கல்லுாரி அறங்காவலர் விஜயா ராமகிருஷ்ணன், இணை செயலர் சரண்குமார், நிறுவன வளர்ச்சி இயக்குனர் சக்திஸ்ரீ, செயல் இயக்குனர் குப்புசாமி, கல்லுாரி முதல் வர் முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.
