ADDED : மே 07, 2026 05:30 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம், :கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், மரவள்ளிக்கிழங்கு செடிகள் செழிப்புடன் வளர்ந்து
வருகிறது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகிளிப்பட்டி, உடையந்தோட்டம், சிவாயம், மேட்டுப்பட்டி, குழந்தைப்பட்டி, பாப்பகாப்பட்டி, புனவாசிப்பட்டி, அந்தரப்பட்டி, கணக்கம்பட்டி, பஞ்சப்பட்டி ஆகிய பகுதிகளில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.
நடவு செய்யப்பட்ட மரவள்ளிக்கிழங்கு குச்சிகள், பசுமையாக வளர்ந்து செழிப்பாக உள்ளது. மேலும் இயற்கை உரம் மூலம், கிழங்குகள் நல்ல ஊக்கத்துடன் வளர்ச்சி கண்டு கூடுதல் எடை கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இப்பகுதியில், 50 ஏக்கர் பரப்பளவில மரவள்ளிக்கிழக்கு சாகுபடி பணி நடந்து வருகிறது.
