/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 'காப்பு'
/
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 'காப்பு'
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 'காப்பு'
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 'காப்பு'
ADDED : அக் 27, 2024 03:59 AM
அரவக்குறிச்சி: பள்ளப்பட்டி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் தெரு நாய்களை கட்-டுப்படுத்த தவறிய நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, இந்திய சமூக ஜனநாயக கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம், நேற்று நடந்தது.
கடந்த ஒரு மாதத்தில், பள்ளப்பட்டியில் வெறி-நாய்கள் கடித்து, 5 ஆடுகள் இறந்தன. இச்சம்பவம் பொதுமக்-களை பீதியடைய செய்துள்ளது. மேலும், சாலையில் நடந்து செல்லும் குழந்தைகள், முதியோரை துரத்தி கடித்த வருவதாகவும் கூறி, நகராட்சி நிர்வாகத்தில் புகார் தெரிவித்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இந்திய சமூக ஜனநாயக கட்சி சார்பில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அவர்களை, போலீசார் கைது செய்தனர். இதற்கு, கட்சியின் திருச்சி மண்டல தலைவரும், மாநில செயற்குழு உறுப்பினருமான ஹஸ்ஸான் பைஜி, கண்டனம் தெரிவித்துள்ளார்.