/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பாலியல் துன்புறுத்தல் தொழிலாளிக்கு 'காப்பு'
/
பாலியல் துன்புறுத்தல் தொழிலாளிக்கு 'காப்பு'
ADDED : மார் 11, 2026 08:56 AM
ஈரோடு:ஈரோட்டை அடுத்த நாதகவுண்டம்பாளையம்
செக்குமேடு புதுக்காலனியை சேர்ந்தவர் ஜீவானந்தம், 30; கூலி
தொழிலாளி. திருமணம் ஆகாதவர். நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில்
தனியாக வசித்து வரும் குப்பாயி, 55, என்பவர் வீட்டில் அத்துமீறி
நுழைந்து, பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். குப்பாயி
கூச்சலிடவே ஜீவானந்தம் ஓட்டம் பிடித்தார்.
ஈரோடு தாலுகா போலீசில்
அவர் அளித்த புகாரின்படி, வன்-கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிந்து,
ஜீவானந்தத்தை போலீசார் கைது செய்தனர். கடந்த ஆண்டு இதேபோல் மூதாட்டி
வீட்டில் புகுந்து, பாலியல் தொல்லை கொடுக்க முயன்று ஜீவா-னந்தம்
கைதாகியுள்ளார் என்றும், போலீசார் தெரிவித்தனர்.

