ADDED : அக் 02, 2026 05:07 AM

அ நிறம் | அளவு
கரூர்:கரூர் தலைமை தபால் நிலையம் முன், கம்யூ., கட்சிகள் சார்பில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலர் ஜோதிபாசு தலைமை வகித்தார். தேர்தல் ஆணையர்களின் கருத்துகளை, புறந்தள்ளிவிட்டு தன்னிச்சையாக, சர்வாதிகார போக்கில், அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டு வரும், பல்வேறு மாநிலங்களின் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளில் குளறுபடிகளுக்கு காரணமான, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி விலக கோரி கோஷம் எழுப்பினர். ஆர்பாட்டத்தில், மாநகர செயலாளர் தண்டபாணி உள்பட பலர் பங்கேற்றனர்.
