/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பன்னாட்டு சில்லறை நிறுவனத்தை கண்டித்து முற்றுகை போராட்டம்
/
பன்னாட்டு சில்லறை நிறுவனத்தை கண்டித்து முற்றுகை போராட்டம்
பன்னாட்டு சில்லறை நிறுவனத்தை கண்டித்து முற்றுகை போராட்டம்
பன்னாட்டு சில்லறை நிறுவனத்தை கண்டித்து முற்றுகை போராட்டம்
ADDED : ஆக 29, 2025 01:48 AM
கரூர், ''திருச்சியில் உள்ள, பன்னாட்டு சில்லறை வணிக நிறுவனத்தை கண்டித்து, முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என,'' தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்ரம ராஜா தெரிவித்தார்.
கரூரில், மாவட்ட வர்த்தக கழகம் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இணைந்து நேற்று பொதுக்குழு கூட்டம் நடத்தியது. மாவட்ட தலைவர் ராஜூ தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்ரம ராஜா நிருபர்களிடம் கூறியதாவது: பன்னாட்டு சில்லறை வணிக நிறுவனங்களால், உள்ளூர் சில்லறை வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.
இதை கண்டித்து, திருச்சியில் பன்னாட்டு சில்லறை (டி.மார்ட்) வணிக நிறுவன கட்டுமான பணி நடக்கும் இடத்தின் முன்புறம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் முற்றுகை போராட்டம் நாளை நடத்தப்படும். இது முதல்கட்டமான போராட்டமாக இருக்கும். தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுக்க உள்ளோம். இவ்வாறு கூறினார்.மாவட்ட செயலாளர் வெங்கட்ராமன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி உடனிருந்தனர்.