ADDED : செப் 23, 2026 07:52 AM

கரூர்:புகழூர்
நகராட்சி வேலாயுதம்பாளையம் அருகே, செம்படாம்பாளையம் பகுதியில்,
கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, மாவட்ட நிர்வாகம் முடிவு
செய்தது.
இதற்கு, அந்த பகுதி மக்கள் ஏற்கனவே, எதிர்ப்பு தெரிவித்து
இருந்தனர். இந்நிலையில், நேற்று செம்படாம்பாளையத்தில்,
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, தேர்வு செய்யப்பட்ட
இடத்தில், பொக்லைன் இயந்திரம் மூலம் அளவீடு பணிகள் தொடங்கின.
அப்போது அப்பகுதி மக்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க
எதிர்ப்பு தெரிவித்து, பொக்லைன் இயந்திரம் முன் நின்று கொண்டு
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, புகழூர்
தாசில்தார் சத்தியமூர்த்தி, அரவக்குறிச்சி டி.எஸ்.பி., பானு மற்றும்
அரசு துறை அதிகாரிகள், கரூரில் உதவி கலெக்டர் தலைமையில், விரைவில்
பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்து கொள்ளலாம் என, பொதுமக்களிடம்
கூறினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால், செம்படாம்
பாளையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
