/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
100 நாள் வேலை பெயர் மாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
100 நாள் வேலை பெயர் மாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
100 நாள் வேலை பெயர் மாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
100 நாள் வேலை பெயர் மாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 20, 2025 07:23 AM
கிருஷ்ணராயபுரம்: நுாறு நாள் திட்ட வேலை பெயர் மாற்றத்தை கண்டித்து, அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில், லாலாப்பேட்டை தபால் நிலையம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் கண்ணதாசன் தலைமை வகித்தார். இதில், மத்திய அரசு புதிதாக சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ளது. அதில், 100 நாள் திட்ட வேலையில் மகாத்மகாந்தி பெயரை நீக்கி விட்டு, புதிய பெயர் வைத்து சட்டம் நிறைவேற்றியுள்ளது. இந்த புதிய சட்டதால், 100 நாள் வேலைக்கு பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
பெயர் மாற்றத்தை ரத்து செய்து விட்டு, 100 நாள் வேலை தொடர்ந்து ஆண்டு முழுவதும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பினர்.