/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பள்ளப்பட்டியில் வி.சி., கண்டன ஆர்ப்பாட்டம்
/
பள்ளப்பட்டியில் வி.சி., கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 06, 2026 06:42 AM
அரவக்குறிச்சி: கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து பள்ளப்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டியில், வட மாநிலங்களில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து, பள்ளப்பட்டியில் வி.சி., கட்சி சார்பில் ஷா நகர் கார்னர் பகுதியில் ஆர்ப்-பாட்டம் நடைபெற்றது.
அரவக்குறிச்சி சட்டசபை தொகுதி பொறுப்பாளர் ஆலிம் ரீபாய் தீன் ஹசனி தலைமை வகித்தார். பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாவட்ட, மாநில நிர்வாகிகள், தொகுதி பொறுப்பாளர்கள் பங்-கேற்று, மத நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டும் என்றும், சிறு-பான்மை மக்களுக்கு எதிரான வன்முறைகளை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் எனவும்
வலியுறுத்தினர்.

