/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
100 நாள் வேலை வாய்ப்பு கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்
/
100 நாள் வேலை வாய்ப்பு கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்
100 நாள் வேலை வாய்ப்பு கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்
100 நாள் வேலை வாய்ப்பு கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்
ADDED : ஜூலை 22, 2025 01:18 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த, தோகைமலை யூனியன் கமிஷனரிடம் கல்லடை பஞ்., மக்கள், 100 நாள் வேலை கேட்டு மனு அளிக்கும் போராட்டம் நடத்தினர்.
கல்லடை பஞ்சாயத்தில், அகில இந்திய விவசாய சங்க தொழிலாளர்கள் சார்பாக, 100 நாள் வேலை வாய்ப்பு வழங்க கோரி யூனியன் கமிஷனரிடம் மனு கொடுக்கும் போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராஜு முன்னிலை வைத்தார்.
மனு கொடுக்கும் போராட்டம், தோகைமலை பஸ் ஸ்டாண்டில் இருந்து துவங்கியது. யூனியன் அலுவலகம் முன் கல்லடை பஞ்., மக்களுக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் வழங்காததை கண்டித்தும், தொடர்ந்து பலமுறை புகார் தெரிவித்தும் ஒன்றிய நிர்வாகம் கண்டும் காணாமல் இருந்து வருவதாக கண்டன கோஷம் எழுப்பினர்.
பின், வேலை வழங்க கோரி ஒன்றிய ஆணையர் பாலசுப்பிரமணியிடம், தொழிலாளர் சங்கம் சார்பில் மனு வழங்கப்பட்டது.