தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ டாஸ்மாக் கடைகளை அடைத்து 2ம் நாள் போராட்டம்

டாஸ்மாக் கடைகளை அடைத்து 2ம் நாள் போராட்டம்

டாஸ்மாக் கடைகளை அடைத்து 2ம் நாள் போராட்டம்


ADDED : மே 28, 2026 05:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 28, 2026 05:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்:காலி பாட்டில் வாங்கும் திட்டத்தை தனியார் வசம் ஒப்படைக்க வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில், 2ம் நாள் கடைகளை அடைத்து, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில், 169 டாஸ்மாக் கடைகள் இருந்தன. அவற்றில், த.வெ.க., தலைமையிலான தமிழக அரசு, கோவில்கள், கல்வி நிறுவனங்கள், பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது. இதையடுத்து, நாமக்கல் மாவட்டத்தில், 10 கடைகளை மூடியதால், தற்போது, கடைகளின் எண்ணிக்கை, 159 ஆக குறைந்துள்ளது. இதற்கிடையில், கடந்த, தி.மு.க., ஆட்சியில், விற்பனை விலையைவிட கூடுதலாக, 10 ரூபாய், சரக்கு பாட்டிலில், ஸ்டிக்கர் ஒட்டி, காலி பாட்டிலை திரும்ப ஒப்படைப்பவரிடம், 10 ரூபாய் வழங்கும் பணி நடைமுறைப்படுத்தப்பட்டது.

அதற்கு, டாஸ்மாக் பணியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்களிலும் ஈடுபட்டனர். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது முதல், தொடர்ந்து காலி பாட்டிலை திரும்ப பெறுவதற்கு, டாஸ்மாக் பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அத்திட்டத்தை, தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும்' என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், காலி பாட்டிலை திரும்ப பெறும் திட்டத்தை, தனியார் வசம் ஒப்படைக்க வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில், நேற்று முன்தினம், டாஸ்மாக் குடோனில், கடைகளை மூடி ஆர்ப்பாட்டம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, இரண்டாம் நாளாக, நேற்றும் கடைகளை மூடி, டாஸ்மாக் குடோன் முன், காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். 'காலி பாட்டில்களை டாஸ்மாக் ஊழியர்கள் திரும்ப பெறமாட்டோம். கேரளா அரசு போல், மதுபான ஊழியர்களுக்கு வழங்கும் சம்பளம் மற்றும் அனைத்து சலுகைகளையும் தமிழக அரசு எங்களுக்கு வழங்க வேண்டும். டாஸ்மாக் நிரந்தரம் என்றால், அதில் பணியாற்றும் ஊழியர்களையும் நிரந்தரப்படுத்தி, அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி இந்த காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டாஸ்மாக் பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், மாவட்டத்தில், 159 கடைகள் மூடப்பட்டுள்ளன. அதனால், டாஸ்மாக் கடைக்கு வந்த, 'குடி'மகன்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us