/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இ-பைலிங் முறையை நிறுத்த கோரி நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம்
/
இ-பைலிங் முறையை நிறுத்த கோரி நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம்
இ-பைலிங் முறையை நிறுத்த கோரி நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம்
இ-பைலிங் முறையை நிறுத்த கோரி நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 18, 2025 05:29 AM

கரூர்: '' இ-பைலிங் முறையை நிறுத்தி வைக்கக்கோரி, நாளை சென்னை உயர்நீதிமன்றம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்,'' என, தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் மாரப்பன் தெரிவித்தார்.
கரூர் வழக்கறிஞர் சங்கம் சார்பில், ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், பங்கேற்ற தமிழ்-நாடு புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் மாரப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:கடந்த, 1 முதல் தமிழக நீதிமன்றங்களில் இ-பைலிங் முறை கட்-டாயப்படுத்தப்பட்டுள்ளது. அதை கண்டித்து மாநிலம் முழு-வதும், 80 ஆயிரம் வழக்கறிஞர்கள், நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்த முறையை வேண்டாம் என, வழக்கறிஞர்கள் சொல்லவில்லை.
தமிழக நீதிமன்றங்களில், இ-பைலிங் முறையை கையாளும் வகையில், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை. மேலும், அடிக்கடி சர்வர் கிடைக்காததால், நீதிமன்றம் தொடர்பான ஆவ-ணங்களை கையாள முடியவில்லை. காலதாமதம் ஆகிறது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இ-பைலிங் நடைமு-றையை நிறுத்தி வைக்க வேண்டும். பிசிகல் பில்லிங் முறையை நடை முறைப்படுத்த வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியு-றுத்தி வரும், 19 ல் சென்னை உயர்நீதிமன்றம் முன், வழக்கறி-ஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.
* குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன், வக்கீல் சங்கம் சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, வக்கீல் சங்க தலைவர் சாகுல் அமீது தலைமை வகித்தார். சங்க செயலாளர் சரவணன் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், 'இ-பைலிங்' முறையை உடனே ரத்து செய்ய வலியுறுத்தி, கண்டன கோஷம் எழுப்பினர். 50க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

