/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிந்தலவாடி பஞ்சாயத்தை கண்டித்து புனவாசிப்பட்டி மக்கள் போராட்டம்
/
சிந்தலவாடி பஞ்சாயத்தை கண்டித்து புனவாசிப்பட்டி மக்கள் போராட்டம்
சிந்தலவாடி பஞ்சாயத்தை கண்டித்து புனவாசிப்பட்டி மக்கள் போராட்டம்
சிந்தலவாடி பஞ்சாயத்தை கண்டித்து புனவாசிப்பட்டி மக்கள் போராட்டம்
ADDED : அக் 03, 2024 07:21 AM
கிருஷ்ணராயபுரம்: புனவாசிப்பட்டி கிராமத்தில், சிந்தலவாடி பஞ்சா-யத்து நிர்வாகத்தை கண்டித்து காத்திருப்பு போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி பஞ்சா-யத்து, புனவாசிப்பட்டி கிராமத்திற்கு பஞ்சாயத்து சார்பில் ஐந்து ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் செய்து தராமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். மற்றும் பஞ்சாயத்து தலைவர், செயலாளர்கள் பஞ்சாயத்து வரவு, செலவு கணக்கு முறையாக மக்களுக்கு தெரிவிக்காதது ஆகிய நிர்வாக சீர்-கேடுகளை கண்டித்து, நேற்று காலை புனவாசிப்-பட்டி கிராமத்தில் மக்கள் காத்திருப்பு போராட்-டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், சிந்தலவாடி பஞ்சாயத்தில் அதிகமான மக்கள் தொகை இருப்பதால், அதனை இரண்டாக பிரிப்பது குறித்து மக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.