/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பு சார்பில் தர்ணா போராட்டம்
/
ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பு சார்பில் தர்ணா போராட்டம்
ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பு சார்பில் தர்ணா போராட்டம்
ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பு சார்பில் தர்ணா போராட்டம்
ADDED : டிச 04, 2024 01:44 AM
ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பு சார்பில் தர்ணா போராட்டம்
கரூர், டிச. 4-
தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு, கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் சாமுவேல் சுந்தரபாண்டியன் தலைமையில், கலெக்டர் அலுவலகம் முன், நேற்று தர்ணா போராட்டம் நடந்தது.தி.மு.க., அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். 70 வயதை பூர்த்தி செய்தவர்களுக்கு, 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பொது துறையில் இருந்து, ஓய்வு பெற்றவர்களுக்கு குறைந்தப்பட்ச ஓய்வூதியம், 7,850 ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கூட்டமைப்பு நிர்வாகிகள் சுந்தரகணேசன், வெள்ளையன், ராஜமாணிக்கம், காத்தமுத்து, சுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.