/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
/
போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 14, 2025 07:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கரூர் கிளை (தொ.மு.ச.,) போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில், செயலாளர் கெம்பராஜ் தலைமையில், திருமாநிலையூர் போக்குவரத்து பணிமனை முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், மதுரை அரசு போக்குவரத்து கழக மண்டலத்தில், ஓட்டுனரை தாக்கிய அதிகாரி மாரிமுத்துவை கண்டித்தும், மாரிமுத்து மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்ககோரியும் கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், செயலாளர் துரைசாமி, கூட்டமைப்பு நிர்வாகிகள் பழனிசாமி, சதீஷ்குமார், கணேசன், மகேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.