/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பொது பாதையில் வேலி போட்டு தடுத்ததால் மறியல் போராட்டம்
/
பொது பாதையில் வேலி போட்டு தடுத்ததால் மறியல் போராட்டம்
பொது பாதையில் வேலி போட்டு தடுத்ததால் மறியல் போராட்டம்
பொது பாதையில் வேலி போட்டு தடுத்ததால் மறியல் போராட்டம்
ADDED : டிச 14, 2025 08:52 AM

குளித்தலை: புதுப்பட்டியில், பொது பாதையை தனி நபர் வேலி போட்டு தடுத்ததால், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
கரூர் மாவட்டம், குளித்தலைஅடுத்த புதுப்பட்டி கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். 100 ஆண்டுகளுக்கு மேலாக, பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொது பாதையை, புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த விஜய-குமார் என்பவர் வேலி போட்டு தடுத்து போக்குவ-ரத்தை தடை செய்தார். கிராம பொதுமக்கள் நடைபாதை வழியாக மருத்துவமனை, பள்ளி,கோவில்கள் மற்றும் பல்வேறு கிராமத்திற்கு சென்று வந்த பாதையை தனிநபர் வேலி போட்டு தடுத்துள்ளார்.
கடந்த வாரம் சப்-கலெக்டரிடம் வேலியை அகற்றிட வேண்டும்,பொது மக்களுக்கு பயன்-பாட்டுக்கு விட வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். சம்பவ இடத்தில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் உறுதி-யளித்தார். ஆனால் ஒரு வாரமாக அதிகாரிகள் யாரும் வராததால், நேற்று மதியம்2:30 மணிய-ளவில் அப்பகுதி மக்கள், பள்ளி மாணவ, மாண-வியர், விவசாயிகள் இனுங்கூர்--நல்லுார் நெடுஞ்சாலையில்புதுப்பட்டி பஸ்
நிறுத்தத்தில் அரசு பஸ்சை சிறை பிடித்து மறியலில் ஈடுபட்-டனர்.எஸ்.ஐ., பிரபாகரன், ஆர்.ஐ.,சுவப்பிரியா மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர்
வேலி அமைத்த விவசாயி விஜயகுமாருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, வேலியை அகற்றி மீண்டும் மக்கள் பயன்பாட்-டுக்கு கொண்டு வரப்பட்டது. போராட்டத்தில் ஈடு-பட்ட பொதுமக்கள், விவசாயிகள், பள்ளி மாணவ மாணவியர் ஆகியோர் வருவாய் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.
சாலை மறியலால் ஒரு மணி நேரம் போக்குவ-ரத்து பாதிக்கப்பட்டது.

