/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அன்புக்கரங்கள் திட்டத்தில் 124 குழந்தைக்கு உதவி வழங்கல்
/
அன்புக்கரங்கள் திட்டத்தில் 124 குழந்தைக்கு உதவி வழங்கல்
அன்புக்கரங்கள் திட்டத்தில் 124 குழந்தைக்கு உதவி வழங்கல்
அன்புக்கரங்கள் திட்டத்தில் 124 குழந்தைக்கு உதவி வழங்கல்
ADDED : செப் 16, 2025 01:28 AM
கரூர், கரூர், தான்தோன்றிமலை அரசு கலை கல்லுாரியில், அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ், குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் தங்கவேல் உதவித்தொகை வழங்கிய பின், கூறியதாவது: பெற்றோர்கள் இருவரையும் இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளுக்கு, 18 வயது வரையிலான பள்ளி படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர, அன்புக்கரங்கள் திட்டத்தின் மூலம் மாதம், 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
பள்ளி படிப்பு முடித்தவுடன் கல்லுாரி கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டு பயிற்சியும் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாவட்டத்தில், 124 குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ, மாநகராட்சி மேயர் கவிதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ப்ரியா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) செல்வமணி, மாவட்ட சமூக நல அலுவலர் செல்வி உள்பட பலர் பங்கேற்றனர்.