/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கடை வியாபாரிகளுக்கு மஞ்சப்பை வழங்கல்
/
கடை வியாபாரிகளுக்கு மஞ்சப்பை வழங்கல்
ADDED : மே 25, 2025 01:34 AM
குளித்தலை :குளித்தலை அடுத்த, நங்கவரம் டவுன் பஞ்., குறிச்சியில் பிளாஸ்டிக் தவிர்த்தல் மற்றும் மஞ்சப்பை வாங்க வலியுறுத்தி விழிப்புணர்வு முகாம் நடந்தது.செயல் அலுவலர் காந்த ரூபன் தலைமை வகித்தார்.
நங்கவரம் டவுன் பஞ்., தலைவர் ராஜேஸ்வரி, துணைத்தலைவர் அன்பழகன், மாஜி மாவட்ட பஞ்., துணைத்தலைவர் தேன்மொழி தியாகராஜன், ஒன்றிய செயலர்கள் சந்திரன், தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து, எம்.எல்.ஏ., மாணிக்கம் பேசினார். இதையடுத்து பொது மக்கள், கடை வியாபாரிகளுக்கு மஞ்சப்பை வழங்கினார். பின், கழிவுநீர் வெளியேற்றும் வாகனத்தை தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் வேலன், ரவி, லதா சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.