/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
239 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கல்
/
239 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கல்
ADDED : மார் 07, 2026 03:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலையில், உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ், தனியார் கல்லுாரி, பாலிடெக்னிக் கல்லுாரி மாணவ, மாணவியருக்கு லேப்டாப் வழங்கப்பட்டது.
நகராட்சி தலைவர் சகுந்தலா தலைமை வகித்தார். குளித்தலை மற்றும் தோகைமலை யூனியன் கமிஷனர்கள் மணிமேகலை, வின்சென்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி, தமிழக அரசின் சாதனைகள் குறித்து பேசி கல்லுாரி மற்றும் பாலிடெக்னிக் மாணவ, மாணவியருக்கு லேப்டாப்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அரசு வக்கீல் சாகுல், நகராட்சி கவுன்சிலர்கள் குளித்தலை மற்றும் தோகைமலை யூனியன் அலுவலர்கள், பணியாளர்கள், கல்லுாரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

